/ SOFTWARE

விரைவில் எதிர்பாருங்கள் Google இன் “Project Fi” தொழில்நுட்பம்!

Google’s Project Fi mobile service will reportedly be boosted by a major expansion of compatible smartphones this week. Fi will add support for Samsung, OnePlus, and iPhones.

Google நிறுவனமானது “Google Fi” (Project Fi) எனும் தொழில்நுட்பத்தினை iPhone , Samsung மற்றும் OnePlus Deviceகளில் Beta Version இனை நாளை (29/11/2018) அறிமுகபடுத்தவுள்ளது. இந்த வசதியினை பெற்றுகொள்ள மேற்குறிப்பிட்ட Deviceகள் அதற்கென தொழில்நுட்ப வசதியினை கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது.

Google's Project Fi

மேலும், Google நிறுவனம் தயாரித்து வெளியிட்ட Pixel 3 XL, Picel 2, Pixel 2XL, LG G7, LG V35, Moto G6, Moto X4 போன்ற Deviceகளில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தினை உபயோகிக்க கூடியதாக இருந்தது. Google Fi என்று ஆரம்பித்த இந்த தொழில்நுட்பமானது “Project Fi” எனும் புதுப்பொழிவுடன் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வந்தடையவுள்ளது. Project Fi (Google Fi) தனது வாடிக்கையாளர்களுக்கு Wireless தொழில்நுட்பத்தில் அதாவது, Google இன் MVNO (Mobile Virtual Network Operator) ஊடாக வந்தடைய உள்ளது.

MVNO தொழில்நுட்பத்தினூடாக எந்தவித Network இடையூரின்றி இலகுவாக அவர்கள் பயன்படுத்தும் Carrier மற்றும் இத்தொழில்நுட்பத்தினை சுயமாக (Automatic) மாற்றிக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இந்த வசதியினை Google நிறுவனம் 2015 இல் ஒரு சில Google நிறுவன Devicesகளுக்கு மட்டுமே பயன்படக் கூடியதாக இருந்தது. இச்சலுகையினை அமேரிக்க டொலர் 20 இற்கு Unlimited Calls மற்றும் SMS வசதியினை வாடிக்கையாளருக்கு வழங்கி வந்தது. மேலும் அமேரிக்க டொலர் 10 இற்கு 1GB டேட்டா (DATA) இனையும் வழங்கி, உபயோகிக்க கிடைக்காத எஞ்சிய Data இனை, அடுத்த மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய விசேட வசதியினை வழங்கியது.

Project Fi வசதியானது, மூன்று LTE வசதியினை ஒருங்கிணைத்து மேலும் விருத்தியாக்கப்பட்டு, மேலும் பல சலுகையினை தனது வாடிக்கையாளரக்கு கூடிய விரைவில் Google நிறுவனம் தரவுள்ளது.