/ TECHNOLOGY

செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்த நாசாவின் Insight!

NASA’s InSight lander touched down safely on the Martian surface today (Nov. 26), pulling off the first successful Red Planet landing.

மே மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட Insight ஆறு மாதங்களில் சுமார் 548 மில்லியன் கி.மீ. தொலைவு பயணித்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.

The Insight Landing in Mars

1976ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறு. பல விண்கலங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான Insight செவ்வாய் கிரகத்தின் தரையில் கால் பதித்துள்ளது. மூன்று கால்களைக் கொண்ட Insight தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டே வந்து என்ஜினிலிருந்து விடுபட்டு தரையிரங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆழமாக ஆய்வு செய்யும் நோக்கில் அனுப்பட்ட insight விண்கலம், தரை இறங்கியதும் எடுத்த முதல் புகைப்படத்தையும் நாசாவுக்கு அனுப்பியுள்ளது. அதனை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மே மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இது ஆறு மாதங்களில் சுமார் 548 மில்லியன் கி.மீ. தொலைவு பயணித்து செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.

இன்சைட் விண்கலத்துக்கு முன் நாசா அனுப்பிய Curiosity விண்கலம் கடந்த மார்ச் மாதம் செவ்வாய் கிரகத்தைத் தொட்டது நினைவுகூரத்தக்கது.