/ TECHNOLOGY

நீண்ட நாட்களுக்கு பிறகு LG அறிமுகம் செய்யும் புதிய Laptop Modelகள்.!

The mysterious LG Gram 2-in-1 and LG Gram 17 were leaked in Best Buy listings on Monday, ahead of an expected CES 2019 announcement.

LG நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு Laptop modelகளை அறிமுகம் செய்தது, அந்த laptop modelகள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது, இந்நிலையில் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் விரைவில் நடைபெறும் CES 2019 நிகழ்ச்சியில் 2-இன்-1 laptop modelகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது LG நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு அறிமுகம் செய்யு புதிய laptop modelகள் தலை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Display CES 2019 நிகழ்ச்சியில் LG Gram laptop modelகள் 17-inch மற்றும் 14-inch display வடிவமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 14-inch laptop model 360 degree கோணங்களை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

LG Introduces New Laptops

இரண்டு laptop modelகளும் Intel Core i7-8565u செயலி மற்றும் UHD graphics 620 chipset வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16GB RAM மற்றும் 512GB inbuilt memory ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக memory நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

LG நிறுவனத்தின் laptop modelகள் USB type-C port, USB type-A port, MicroSD Card Slot, 3.5mm audio jack, HDMI Port போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

விரைவில LG அறிமுகப்படுத்தும் 17-inch Gram laptop model 19.5மணி நேரம் Bsttery ஆயுள் வசதியுடன் வெளிவரும், பின்பு 14-inch Gram laptop model 21மணி நேரம் battery ஆயுள் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு laptop modelகளும் Windows இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு Fingerprint Scanner போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்த இரண்டு laptop modelகளிலும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ரூபாய்.2.2லட்சம் விலையில் இந்த laptop modelகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.