/ TECHNOLOGY

Google சான்றிதழ் பெற்ற Micromaxஸின் முதல் Android TV!

Micromax Informatics on Friday launched its first Google-Certified Android TV in two variants,which has no name specifed. The 49-inch and 55-inch 4K UHD HDR10 TV, they have taken a step further in providing consumers with memorable and stunning picture-quality experience.

Micromax Informatics நிறுவனம் வெள்ளியன்று google சான்றிதழ் பெற்ற அதன் முதல் android TVயை இரு variantகளில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அதற்கு பெயரிடவில்லை. முறையே, 49inch மற்றும் 59inch.

Micromax Google Certified TV

தங்கள் நிறுவனத்தின் முதல் android TV குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் Rogan Agarwal பேசுகையில், google சான்றிதழ் பெற்ற முதல் android TVயை அறிமுகம் செய்திருக்கிறோம். அதன் மூலம் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு என்றும் நினைவில் நிற்கக்கூடிய பட தரத்தையும், அனுபவத்தையும் google playயுடன் இணைந்து எண்ணற்ற optionகளை கொடுக்கிறோம். புதிய அறிமுகமான இந்த TV மூலம் பெரிய, தெளிவான, மிகத் துல்லியமான திரையில் படம் பார்த்ததற்கான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புகிறோம். TV தயாரிப்பில் இந்தியாவில் எங்களின் நிலையை ஆணித்தரமாக நிலை நாட்ட முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Google சான்றிதழ் பெற்ற Micromax நிறுவனம் கூறுகையில், HDR தொழில்நுட்பம் அசரவைக்கும் பட தரத்தை வழங்கும் என்று உறுதியளித்தது. இந்த TV அதிகாரப்பூர்வமான Google Play Apps, Games, Movies மற்றும் Music support செய்கிறது. இந்த TV android oreoவில் இயங்குகிறது. Dolby மற்றும் DTS ஒலியமைப்பு. quad-core Cortex-A53 processor, 2.5GB DDR3 RAM, 16GB EMMC சேமிப்பு திறன் கொண்டது.

உள்கட்டமைக்கப்பட்ட ChromeCast மற்றும் MHL இணைப்பு, Voice Searchடன் Google Assistant மற்றும் Wireless Smartphone Controlலைக் கொண்டுள்ளது. micromax தங்களுடைய தனித்துவமான ஒலியமைப்பை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த TVயில் 2*12w Speakers உள்ளன. மின் திறன் Eco Energy சான்றிதழை பெற்றிருப்பதாக Micromax கூறியுள்ளது.

Micromaxஸின் Adroid TV இந்த மாதம் முதல் சந்தையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் Micromax நிறுவனம் android 8.1 oreoவில் இயங்கும் இரு smartphoneகளை அறிமுகம் செய்தது.