/ TIPS & TRICKS

WhatsAppஇன் புதிய தொழிநுட்பம் “Number சேமிக்காமல்” Message அனுப்பலாம்!

Do you know how to send WhatsApp message without saving number on Android? If not, you are at right place. WhatsApp has really changed the way we communicate and many people are more comfortable using WhatsApp than making a call or even sending an SMS.

Smartphone இல்லாதவர்கள் கூட இருக்கலாம். smartphoneனில் வாட்ஸ் அப் இல்லாதவர்கள் இருப்பது அரிதுதான். Messaging applicationகளில் முன்னணியில் இருக்கும் WhatsApp, பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.

ஆனால் அதில் உள்ள வசதிகள் நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. ஒருவருக்க WhatsApp message அனுப்ப வேண்டுமென்றால், அந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே அனுப்ப முடியும். அப்படி சேமிக்காமலேயே ஒருவருக்கு எப்படி WhatsApp Message அனுப்புவது என்பதுதான் நிறைய பேருக்கு கேள்வியாக இருக்கிறது.

அந்த கேள்விக்கு உங்களுக்கும் இருந்தால் இந்த தகவல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தொலைபேசி எண்ணை WhatsAppபில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இருவருக்குள் WhatsAppபில் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும். WhatsAppபில் இணைக்கப்படாத ஒருநபருக்கு WhatsApp வழியாக ஒருபோதும் Message அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Send WhatsApp Message Without Saving Numbers

சரி. நாம் message அனுப்ப உள்ள நபரின் எண் WhatsAppபில் இருந்து, அந்த எண்ணை சேமிக்காமலே message எப்படி அனுப்புவது?

  1. உங்கள் மொபைலில் Chrome, அல்லது ஏதேனும் Web Browserரை திறக்கவும்.
  2. https://api.WhatsApp.com/send?NUMBER மேற்காணும் முகவரியை இட்டு NUMBER என்று இருக்கும் இடத்தில் யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது எண்ணை type செய்யவும். உதாரணத்திற்கு எண் +94-12345678 என்றிருந்தால் 9412345678 என்று type செய்யவும். இப்போது Enter அழுத்தவும்.
  3. திரையில் Message என்று பச்சை நிற button தோன்றும். அதை அழுத்தவும்.
  4. தானாக WhatsApp திறந்து அந்த எண்ணுக்கு message அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.
  5. https://wa.me/WhatsAppNumber இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம். WhatsAppNumber என்பதற்கு பதில் எண்ணை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.