/ TIPS & TRICKS

Google Plus Accountடை Delete செய்வது எப்படி?

Deleting your Google+ profile will not affect certain other Google products, like Search, Gmail, and your Google Account.

Google நிறுவனத்தின் சமூக வலைத்தளமான Google Plus வரும் மார்ச் மாதம் 2019 முதல் மூடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. Google Plus பயனாளிகள் சுமார் 5 லட்சம் பேர்களின் Personal Photoகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆனதை சமீபத்தில் கண்டுபிடித்த கூகுள் நிறுவனம், Google Plusஸை மூட அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் Google நிறுவனம் மூடுவதற்கு முன்பே உங்கள் Google Plus accountடில் உள்ள Photoக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உங்கள் accountடை நீங்கள் மூட முடிவு செய்தால் அதற்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளோம். நாங்கள் கூறிய வழிமுறைகளை நீங்கள் follow செய்தால் உங்கள் Google Plus delete செய்யப்பட்டுவிடும்

இந்த வழிமுறைகளை நீங்கள் தொடங்கும் முன் உங்களுக்கு Google Plus account இருக்கின்றதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Gmail account சென்று அதில் உள்ள profile படத்தை click செய்யுங்கள். உங்கள் gmailயில், Google Plus தளத்தில் இணைக்கப்பட்டிருந்தால் அதில் Google Plusஸின் profile காட்டும்.

இனி உங்கள் Google Plus accountடை delete செய்வது எப்படி என்பதை பார்போம்,

  1. முதலில் உங்கள் Gmailலை username மற்றும் password கொண்டு login செய்யுங்கள்.
  2. அதன் பின்னர் மேலே உள்ள வலது ஓரத்டில் உள்ள profile pictureரை click செய்யுங்கள்.
  3. அவ்வாறு செய்தால் நீங்கள் Google Plus பக்கத்திற்கு redirect செய்யப்படும்.
  4. அதன் பின்னர் இடதுபுரத்தில் உள்ள ‘Settings’ என்ற Optionனை Click செய்யுங்கள்.
  5. அதில் உள்ள optionகளை Scroll Down செய்தால் அதில் Delete your profile என்ற பகுதி Account sectionனில் இருக்கும்.
  6. அப்போது உங்கள் passwordடை உறுதி செய்ய கேட்கும் அனைத்து accountடில் இருந்து Unfollow செய்கிறிர்களா என்று கேட்கும் அதற்கு நீங்கள் ‘Yes’ என்பதை Click செய்ய வேண்டும்.
  7. அடுத்த பக்கத்தில் Scroll செய்தால் நீங்கள் Follow செய்தவர்களை Unfollow செய்வதற்கான உறுதி மொழியை கேட்கும் அதற்கு நீங்கள் ‘Yes’ என்பதை click செய்து உறுதி செய்து கொள்ளூங்கள்.
  8. அதன் பின்னர் ‘Delete’ என்ற பட்டனை Click செய்யுங்கள்.
  9. கடைசியாக உங்கள் Account delete செய்யப்பட்டதை உறுதி செய்யும் message வரும்.