/ BUSINESS

மூடப்படும் Ebay India இணையதளம்..புதிய திட்டத்தோடு களமிறங்கும் Flipkart

eBay India to Be Shut Down on August 14, Flipkart to Launch New Platform for Refurbished Goods.

பழமையான இபே இந்திய விற்பனைத் தளம் விரைவில் மூட இருப்பதாகவும், இனி இபே சேவைகள் இந்தியாவில் கிடைக்காது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சென்ற வருடம் இந்தியாவின் பழமையான இ-காமர்ஸ் நிறுவனமான இபே நிறுவனத்தினை வாங்கிய நிலையில் அதனை மூடிவிட்டு அதற்கு பதில், புதிய தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இபேவிற்குப் பதிலாகப் புதிய தளம் ஒன்றை பிளிப்கார்ட் அறிமுகச் செய்ய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 14-க்கு பிறகு சேவைகள் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு இபே நிறுவனத்தினைப் பிளிப்கார்ட் வாங்கியது. பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.4 பில்லியன் டாலரும், இபே நிறுவனம் 720 மில்லியன் டாலரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தன. ஆனால் மே மாதத்துடன் தனது ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறிய இபே மீண்டும் வேறு விதமான இ-காமர்ஸ் சேவையினை அளிக்கும் முடிவில் இறங்கியுள்ளது.

பழைய பொருட்களை விற்பதற்கான பிளிப்கார்ட்டின் புதிய தளமானது ஆகஸ்ட் மாதம் துவங்கப்படும் என்றும், ஆனால் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகே சேவையினை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இபே இந்தியாவின் Bazee.com என்ற நிறுவனத்தினை வாங்கி 2004-ம் ஆண்டு முதல் தனது சேவையினை அளித்து வரும் இபே நிறுவனத்தினால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா உடனான போட்டியில் மூழ்கிப் போனது.

இபே நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதலீடு செய்த நிலையில் மீண்டும் சென்ற பிப்ரவரி மாதம் கூடுதலாக 61 மில்லியன் டாலரினை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.