/ MOBILES

பெண்ணின் பர்ஸில் பற்றியெரிந்த Samsung Galaxy Note-9

A fresh report has now surfaced, with a woman claiming that her brand new Galaxy Note 9 burst into flames inside her purse.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 4000 ஆம்பியர் பேட்டரி திறன் உள்ளதைக் கண்டு பலரும் ஆச்சரியதில் ஆழ்ந்தனர்.

அதேநேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறிது அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த சாம்சங் சி.இ.ஓ. கோஹ், பேட்டரியைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதென்றும் தெரிவித்தார்.

ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாக பெண் ஒருவரின் பர்ஸில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 பற்றி எரிந்ததாக அமெரிக்காவில் செய்திகள் வலம் வருகின்றன. லாங் தீவை சேர்ந்த டீன் சாங் என்பவருக்குதான் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இதுதொடர்பாக இழப்பீடு கேட்டு அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எலிவேட்டரில் அவர் சென்று கொண்டிருந்தபோது, போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதிக சூடு ஏற்பட்டதால், அதனை பர்ஸில் வைத்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் சத்தத்துடன் போன் எரியத் தொடங்கியது.

இதில் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் தண்ணீரை ஊற்றி பற்றி எரிந்த போனை அணைத்துள்ளார். இந்த தகவலை நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

டீன் சங் தனது மனுவில், பர்ஸில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது. இதற்கு சாம்சங் நிறுவனம் இழப்பீடு தர வேண்டும். அதன் நோட் 9-ன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சாம்சங் நிறுவன செய்தி தொடர்பாளர், போன் பற்றி எரிந்தது தொடர்பாக தங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை என்றார்.