/ SOCIAL MEDIA

அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகுவதாக facebook அறிவிப்பு

The social network used to offer dedicated staff to political campaigns to help them develop their online advertising campaigns.

முன்னர் ஒன்லைன் பிரச்சாரங்களில் சமூக வலைத்தளங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

டோனால்ட் ரம்பின் டிஜிட்டல் இயக்குனர், 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அவரின் வெற்றிக்கு பேஸ்புக் பெரிதும் துணைநின்றதாக செய்தி வெளியிட்டிருந்தார்.

இதில் போட்டியாளர் ஹிலாரி கிளிங்டனுக்கும் அதேயளவான ஆதரவு வழங்கப்பட்டிருந்தாலும் அவர் வீழ்ச்சியையே சந்திக்கநேரிட்டதாக பேஸ்புக்கும் தெருவித்திருந்தது.

சமூகவலைத்தளங்களே கூகுளுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்த விளம்பர தாரகராக உள்ளன.

கூகுளும், ருவிட்டரும் கூட அரசியல் பிரச்சாரங்களுக்கென சிறப்பு ஆலோசனைகளை வழங்கிவருகின்றன.

ஆனாலும் இவைகள் தமது செயற்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கவில்லை.

பிரச்சாரங்களுக்குப் பதிலாக பேஸ்புக்கானது தனது வலைப்பக்கத்தினூடு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலவச விளம்பர ஆலோசனைகளை வழங்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஆவணங்களின்படி கடந்த 2016 இன் ஜீன் - நவம்பர் காலப்பகுதிகளில் டோனால்ட் ரம்ப் பிரச்சாரத்துக்கென 44 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஹிலாரி 28 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பேஸ்புக் விளம்பரத்துக்கென முதலிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.