/ SOCIAL MEDIA

உணவுத் தட்டுப்பாடை நீக்க Amazon, Microsoft, Google கைக்கோர்ப்பு!

Tech giants Microsoft, Amazon, and Google are joining forces with international organisations to help identify and head off famines in developing nations using data analysis and artificial intelligence.

பேரிடர் ஆபத்தின் போது உதவிக்கரம் நீட்ட உலகின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவை ஒன்று சேர்ந்து செயல்பட உள்ளன.

கடந்த ஆண்டு, நைஜீரியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளில் உள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும், பேராபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி, உணவுத் தட்டுப்பாடு, இயற்கை பேரிடர் ஆகிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து, பேராபத்து ஏற்படுவதற்கு முன்னரே களத்தில் இறங்கி உதவிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்டிஃபிஷியல் இண்டலிஜெண்ட்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.