/ BUSINESS

Ebayவில் சர்வதேச அளவில் பொருட்களை விற்க அனுமதி!

The Finance and Mass Media Ministry announced that the Sri Lankans now can sell their products to overseas customers through e-commerce platforms such as eBay.

அதிக காலமாக சமூக வளையதளங்களான facebook மற்றும் ஏனையவைகளில் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயமே Ebay, ஆம் இப்போது நீங்கள் Ebay மூலமாக உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்க முடியும். இந்த விடயம் பற்றி ஒரு குறுகிய தகவலை techlanka.lk உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றது.

கடந்த 22ஆம் திகதி நிதி அமைச்சு முன்வைத்த அறிக்கை ஒன்றில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு E-Commerce எனப்படும் தொனிப்பொருள் மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் Online மூலமாக Business to Consumer (B2C) transactionsஇன் போது Consumer அல்லது கொள்வனவு செய்பவர் ஒரு வெளிநாட்டு பிரஜையாக இருந்தால் சுங்க அலுவலகத்திற்கு CUSDEC Application அவ்வேளையில் சமர்ப்பித்தல் அவசியம் இல்லை,இந்த சலுகை US Dollar 3000இற்கு குறைவாக transactions இடம்பெறும் போது மட்டுமே செல்லுபடியாகும். இல்லாத பட்சத்தில் ஒரு மாதத்திக்கான மாத இறுதியில் CUSDEC Application சமர்ப்பித்தல் அவசியம்.

நீங்கள் ஒரு தனியார் அல்லது ஒரு நிறுவனமாக இருந்தால் இலங்கை முதலீட்டுச் சபையில் முட்பதிபு செய்தல் அவசியமாகும்.

E-commerce என்று வந்து விட்டாலே வெறும் Ebay மாத்திரமே என்று நினைத்து விடக்கூடாது.இது online மூலமாக இடம்பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொறுந்தும்.

இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, Paypal சேவையின் மூலமாக பணம் பெரும் கட்டுப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏட்படவில்லை, Paypal மற்றும் Ebay இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.