/ MICROSOFT

இன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்.

Intel launching its 9th generation processors - new Core i9, i7 and i5 processors on October 1st with 8 cores.

இன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core i9, i7 and i5 processors on October 1st with 8 cores) அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட‌ உள்ளன‌. இவை அனைத்தும் 9வது தலைமுறை புரோசசர்களாக‌ வெளியாகவுள்ளன.

இன்டெல் கோர் i9-9900K, 8 கோர்களையும் 16 இழையுடனும் (Intel Core i9-9900K with 8 cores and 16 threads) அறிமுகம் செய்யப்படுகிறது. இணைய‌ தகவல்களின்படி, கோர் i9-9900K, கோர் ஐ9 (தொடரில்) பிராண்டின் கீழ் வெளியாகும் முதல் பிரதான‌ டெஸ்க்டாப் புரோஸசராக‌ (Core i9-9900K will be the first mainstream desktop processor) இருக்கும். இதில் முதன் முறையாக 16MB கொள்ளளவுடைய மூன்றாம் நிலை பதுக்கு நினைவகமும் (L3 Cache Memory) உள்ளடக்கப்பட்டுள்ளது.

Core i7-9700K புரோஸசர் எட்டு கோர்கள் கொண்ட‌ (8 Core) முதல் பிரதான வகை புரோஸசராகும். இதன் வேகமானது 3.6 GHz முதல் 4.9 GHz வரை ஊக்கமளிக்கும் ஆற்றலைக் கொண்டது.

எதிர்வரும் 9000 தொடர் இன்டெல் புரோஸசர்கள் ஏற்கனவே இருக்கும் Z3xx தொடர் மதர்போர்டுகளுடன் இணக்கமாக இருப்பதை பல மதர்போர்டு விற்பனையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.