/ ARTIFICIAL INTELLIGENCE

அலெக்சாவுடன் தமிழில் பேசலாம்! தமிழ் மொழியில் Amazon Alexa

Alexa gets new skills and now customers in India can help Alexa learn Tamil, Hindi, and other Indian languages.

அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌ முடியும். இனி முதல் இந்திய வாடிக்கையாளர்கள், அலெக்சா (Amazon’s digital assistant Alexa) பயன்படுத்தி பல்வேறு இந்திய மொழிகளில் பேச்சு பரிமாற்றம் செய்ய‌ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை அறிவுத்திறனுடன் (artificial intelligence) இயங்கும் அலெக்சா, தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பயனர்களுடன் பேச்சில் ஈடுபடுகிறது. ஆப்பிள் இன் சிரி மற்றும் கூகிள் அசிஸ்டண்ட் (Apple’s Siri and Google Assistant) போன்ற மெய்நிகர் உதவியாளர்களுக்கு (virtual assistants ) நிகராக‌ உள்ளது.

தற்போது அமேசான் நிறுவனம், அலெக்சா இன் பேச்சு அறிதலினை மேம்படுத்தும் விதமாய் சில இந்திய மொழிகளில் அலெக்சாவை பயன்படுத்த முடியும் எனும் ஒரு புதிய திறனையும் சேர்த்துள்ளது. குறிப்பாக celo (கிளியோ) தொழில்நுட்பத்தின் கீழ் இந்த அமேசான் அலெக்சாவைப் பயன்படுத்த முடியும். கிளியோ தொழில்நுட்பம், மொழியியலாளர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் கொண்ட‌ ஒரு குழுவால் வடினமைக்கப்பட்டது. இக்குழு ஏற்கனவே பிரஞ்சு மொழியினை அலெக்சா புரிதலுக்காக‌ மேம்படுத்த உதவியுள்ளது.

மேலும் இந்த அலெக்சா 2017-துவகத்தில், ஆங்கிலம் மட்டுமே புரிந்துதவும் கருவியாக‌ அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் தழிழ், இந்தி, கன்னடம், பெங்காலி, மராட்டி, குஜராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் எக்கோ (Amazon Echo) ஸ்பீக்கர்கள் மட்டுமின்றி பல மின்னணு சாதனங்களின் துணைகொண்டு குறிப்பிடப்பட்ட மொழிகளில் நீங்கள் அலெக்சாவுடன் மிக எளிமையாக பேச முடியும்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட‌ இந்த புதிய திறனை ஆக்டிவேட் செய்ய அமேசான் எக்கோ ஸ்பீக்கரிடம் அலெக்ஸா ஒப்பன் க்ளியோ (Alexa, open Cleo ) என்று குரல் கட்டளையிட்டால் போதும். பின்பு ஏதேனும் ஒரு மொழியைக் கூறி அதனுடன் மிக எளிமையாக பேசமுடியும்.