/ SOCIAL MEDIA

வேடிக்கையான டுவீட் பதில்கள், தடை செய்தது டுவிட்டர்!

Look these funny Twitter responses for a user who killed mosquito and posted it on twitter.

சமீபகாலமாக‌ சமூக வலைத்தளங்கள் (social media) அதன் பயனர்களை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் முயற்சியை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றது. ஒருவரைப் பற்றி அநாவசிய தவல்களை, குறிப்பிட்ட‌ தகவலினை தவறாக‌ பரப்புதல், பழிவாங்கல்கள் போன்ற‌ பதிவுகளை மிக கவனத்துடன் பரிசீலித்து அவற்றை பிரசுரித்து வருகின்றன.

இதற்கு டுவிட்டர் சமூகவலைத் (Twitter social networking) தளமும் விதிவிலக்கானது அல்ல எனும் எடுத்துக்காட்டாக சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானிய‌ பயனர் ஒருவரை தடைசெய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது,

குறித்த நபர் கொசு ஒன்றினை கொன்றுவிட்டு அதன் புகைப்படத்தினை டுவிட்டரில் பதிவு (twitter posts) செய்திருந்தார் . அத்துடன் நின்று விடாது அந்த‌ புகைப்படத்திற்கான‌ வாசகத்தில் “நான் ஓய்வாக இருக்கும்போதும், தொலைக்காட்சி பார்க்கும்போதும் தொடர்ந்து என்னை துன்புறுத்திக்கொண்டு இருந்தாய்… அதனால் இறந்து போ”, என டுவீட் செய்திருந்தார்.

ஆங்கிலத்தில் உண்மை வாசகம் : The tweet reads: “Bastard! Where do you get off biting me all over while I’m just trying to relax and watch TV? Die! (Actually you’re already dead).” The tweet was posted alongside a photo of the dead mosquito.

இந்த வேடிக்கையான‌ டுவீட்டினை டுவிட்டரின் செயற்கை அறிவுத்திறன் (தானியங்கி / artificial intelligence) அமைப்பு கண்டுபிடித்து எச்சரிக்கை அறிவித்து கேள்வி எழுப்பி உள்ளது..

ஜப்பானிய பயனரின் (Japanese Twitter user) @nemuismywife எனும் டுவிட்டர் கணக்கு நிறுத்தப்பட்டது (பயனர் தடை). அவர் பின்னர் @DaydreamMatcha எனும் மற்றொரு கணக்கு உருவாக்கினார், ஆனால் ட்விட்டர் அதனையும் பயனரை வினவியபின் முடக்கிவிட்ட‌து.