/ GOOGLE

Dataவை தேடுவதற்கு தனி Search Engineனை அறிமுகப்படுத்தியது Google

Google on Thursday launched a new search engine for the scientific community that will help them make sense of millions of datasets present online.

டேட்டா செட் சர்ச் என்ற புதிய தேடுதல் சேவையை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். ஆராய்ச்சியாளார்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் டேட்டா சம்மந்தமான வேலை பார்ப்பவர்கள் அனைவருக்குமானதாக இந்த தேடுதல் இன்ஜின் இருக்கும்.

பயனாளர்கள் தங்களுக்கு தேவையான தரவுகள் பற்றி இதில் தேடலாம். வெறும் டேட்டா குறித்த தகவல்கள் மட்டுமே இதில் காட்டப்படும். கூகுள் சர்ச் போல அனைத்து தகவலையும் பார்க்க முடியாது.

கல்வி சம்மந்தமான, கூகுள் ஸ்காலர் சர்ச் போல இந்த டேட்டா சர்ச் பணியாற்றும். “ இந்த சர்ச்சின் மூலம், நீங்கள் தேடும் டேட்டா, இணையதளத்தில் இருந்தோ, டிஜிட்டல் நூலகத்தில் இருந்தோ, தனி நபர் பிளாகில் இருந்தோ எடுத்து வந்து காட்டப்படும்” என்கிறார் கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் நடாஷா நொய். டேட்டா சர்ச்சுக்கு ஏற்ற வகையில் தங்கள் டேட்டாவை இணயத்தில் வழங்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என டேட்டா செட்கள் வழங்கும் நிறுவனங்களிடம் கூகுள் வழி காட்டல் செய்துள்ளது.

“ அந்த வழிகாட்டல்கள் யாதெனில், இந்த டேட்டா செட்டை யார் உருவாக்கியது, எப்போது வெளியிடப்பட்டது, எப்படி திரட்டப்பட்டது, இந்த டேட்டாவை பயன்படுத்த விதிகள் உள்ளனவா, போன்ற தகவல்களை, டேட்டா தரும் நிறுவனங்கள் இணையத்தில் தர வேண்டும்” என்றார் நடாஷா.

பின், கூகுள் இந்த லிங்குகளை திரட்டி, ஆய்வு செய்து டேட்டா பற்றிய தரவுகளை எடுத்து தரும். சுற்றுச்சூழல் தரவுகள், அரசு தரவுகள், சமூகம் பற்றிய தரவுகள் என இன்னும் பல வகைப்பட்ட தரவுகளை இந்த சர்ச்சில் தேடலாம்.