/ GOOGLE

ஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே !

Now Gmail lets you ‘@’ mention people to link them with their email ID in email’s body.

ஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக் கொண்டவை. ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் உள்வரும் செய்திகளுக்கான உறக்கநிலை பொத்தான் ( Snooze Button) ஆகியன உள்ளன.

சீரமைக்கப்பட்ட புதிய ஜிமெயிலில், ட்விட்டர் போன்று பயனர்களை ‘@’ பயன்படுத்தி குறிப்பிடும் வசதியும் உள்ளது, தெரியுமா ?

Gmail இன் புதிய பதிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். You will have to use Gmail’s newest version. எப்படி பெறுவது என அறிய கிளிக் செய்யவும்

நீங்கள் ஒரு புதிய மின்னஞ்சல் அல்லது பதிலை எழுதுகையில் (composing a new Gmail message or a reply,), @ குறியை (@ symbol) உள்ளிட்டதும், உங்களின் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள நபர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும். குறிப்பிட்ட நபரின் பெயரைத் தெரிவு செய்து, அவருக்கான மின்னஞ்சலையும் இணைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, @ Clara என டைப் செய்கின்ற போது அந்த பெயருடன் உங்கள் தொடர்பு பட்டியலில் (Gmail Contact List) உள்ள நபர்களின் பட்டியல் ஒன்றைக் கொண்டு வரும். முதற்பெயர் அல்லது கடைப்பெயரினை பரிந்துரைக்கும். இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், பெயருடன் mailto இணைப்பையும் ஜிமெயில் சேர்க்கும் (will add a mailto link labelled with their name). மின் அஞ்சலைப் பெறும் பெறுநர் அந்த இணைப்பைக் கிளிக் செய்யும் போது, அது புதிய மின் அஞ்சல் தொகுக்கும் விண்டோவினைக் காண்பிக்கும் ( Gmail ->new compose window ).

இதன்மூலம் மற்றொருவரை அறிமுகப்படுத்தி தொடர்பு கொள்ள முடியும், அல்லது பல நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரைவாக ஒரு மின்னஞ்சலில் பட்டியலிட இது உதவும்.

மேலும் @ குறிக்கு பதிலாக ஒரு + குறியைக் டைப் செய்து நபரினை தேர்ந்தெடுத்தால், அந்தத் தொடர்புடைய நபர் தற்போதைய மெயிலின் பெறுநராக தானாக சேர்க்கப்படுவார்.