/ MOBILES

அதிக Screen Space கொண்ட iPhone வெளியாகிறதா? கசியும் தகவல்கள்!

Apple on Wednesday was expected to unveil new iPhones, playing up eye-grabbing edge-to-edge screens in a bid to strengthen its position in a largely saturated global smartphone market.

ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் போன்களை இன்று வெளியிடுகிறது என்று அறிவித்துள்ளது. அதில், புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவில், இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், புதிய மாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

ஐபோன் 9, ஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் ஆகியவை குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, புது மாடல் போன்களில் எட்ஜ் டூ எட்ஜ் ஸ்க்ரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஐபோனின் அளவை அதிகரிக்காது, ஸ்க்ரீன் ஸ்பேஸ் மட்டும் அதிகரிக்க செய்வது ஆப்பிளின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களை கவரும்” என்று நிபுணர் பேட்ரிக் தெரிவித்துள்ளார்.

உலக மொபைல் போன் விற்பனை சந்தையில், 72 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சாம்சங் ஸ்மார்ட் போன்களை பொறுத்த வரை, சாம்சங் கேலக்சி நோட் 9 ஸ்மார்ட் போன் கடந்த மாதம் வெளியானது. ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னிலை பெற்று வருகிறது.

புதுமைகளை கொண்டு புதுப்பிக்க ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட் போன் மட்டுமின்றி ஆப்பிளின் மற்றுமொரு முக்கிய படைப்பான ஸ்மார்ட் வாட்ச், புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வடிவத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.