/ SOCIAL MEDIA

சிறுவர்களுக்கான facebook messenger, புதிய அறிமுகம்

Facebook has added a new feature to its under-13 chat application Messenger Kids, which makes it easier for the children to add their friends on the platform.

13 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான தனது மெசஞ்சர் கிட்ஸ் ( #MessengerKids ) செயலியில் இனி சிறுவர்களே நட்பழைப்புகளை விடுத்து நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

நான்கு சொற்களைக் கொண்ட ஒரு கடவுத்தொடரை உருவாக்கும் ஒரு செட்டிங்கினைப் பெற்றோர் ஆன் செய்த பின்னர் நட்பழைப்புகளை விடுக்க முடியும். நட்பழைப்புகள் நேரடியாக பெற்றோருக்குச் செல்லும். பெற்றோர் இருவரும் அதற்கு ஒப்புதல் அளித்த பிறகே அந்நபர் சம்பந்தப்பட்ட சிறுவருடன் சாட் செய்ய முடியும்.

ஆகவே இது விதிமுறைகளைத் தளர்த்தியதாகவோ பெற்றோரின் கட்டுப்பாட்டில் கைவைப்பதாகவோ ஆகாது. அனைத்து நட்பு வேண்டுகோள்களும் பெற்றோருக்குத் தெரிந்து அவர்களின் ஒப்புதலுடனே ஏற்கப்படும் என டெக் க்ரன்ச் வலைத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒப்புதல் வழங்க்கப்பட்டவுடன் ஆறு வயது முதல் பதிமூன்று வயது வரையிலான சிறுவர்கள் படங்கள், வீடியோக்கள், செய்திகளை தங்கள் நண்பர்களுடனும் பெரியவர்களுடனும் தங்களின் பெற்றோரின் கண்காணிப்பில் அனுப்பிக்கொள்ளலாம்.

எனினும் கார்டியன் நாளேடு வெளியிட்ட செய்திப்படி, ஆறு வயதே ஆன குழந்தைகளை மேலும் மேலும் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகச் செய்வதாக ஃபேஸ்புக் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சரின் முக்கிய வசதிகள் பெரும்பாலானவற்றை உள்ளடக்கிய சிறுவர்களுக்கான மெசஞ்சர் கிட்ஸ் செயலிலை ஃபேஸ்புக் 2017 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.