/ MOBILES

5 நாட்களில் Billion Dollar தாண்டும் SmartPhoneகளின் Online விற்பனை!

Riding on Amazon and Flipkart festive offers, online smartphone sales in India is likely to cross $1 billion (roughly Rs. 7,400 crores) in the next five days, Counterpoint Research said on Tuesday.

Amazon மற்றும் Flipkart நிறுவனங்களின் Festival Offer Sale மூலம் இந்தியாவில் SmartPhone விற்பனையானது அடுத்த 5 நாட்களில் ஒரு பில்லியன் டாலரை (LKR. 17,330 Crores) தாண்டும் என Counter Point தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த அக்டோபர் மாதமானது SmartPhone விற்பனை அளவில் சாதனை படைக்க உள்ளது. மேலும், இதுவரையில்லாத வகையில், ஆன்லைன் நிறுவனங்களின் பங்குகளானது 42 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய பங்களிப்பாக Online SmartPhone சந்தையில் 90 சதவீத பங்குகளை இரண்டு முன்னணி E-commerce நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன.

இந்த ஆண்டின் மொத்த SmartPhone விற்பனையில், Online நிறுவனங்களின் பங்களிப்பானது 36 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலே வேறெங்கும் இல்லாத வகையில் Festival Saleலில் 42 சதவீதத்தை எட்டுவது இதுவே முதன்முறை என Counter Point தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் தருண் பதாக் தெரிவித்துள்ளார்.

இதில் மொத்த Online சந்தையில், பாதிக்கும் மேலான இடத்தில் Xiaomi நிறுவனமே முதன்மை வகுக்கிறது. எனினும் இந்த முறை Xiaomi நிறுவனத்திற்கு போட்டியாக Realme, Honor, Asus, Nokia HMD உள்ளிட்ட Brandகளும் இடம்பெறுகின்றன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த Online விற்பனையில் Samsung நிறுவனமும் தனது Brandடில் சிறந்து விற்பனையான இரண்டு Modelகளை அறிவித்துள்ளது. அதில் ரூ.62,500 INR விலையில் விற்பனையான Galaxy S9னை ரூ.42,990 INRக்கு அமேசானில் விற்பனை செய்கிறது.

இந்தமுறை மொத்த Online விற்பனையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பானது மட்டும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.